திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதை அகற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் 5 தளங்கள் உள்ளது. இங்கு கல்வி, வேலைவாய்ப்பு, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம், குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு வாரமும் திங்களன்றுநடைபெறும் குறைதீர் கூட்டத்தில்திரளான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் தினந்தோறும் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடது புறம் சீமை கருவேலமரங்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புதர்மண்டிகாட்சியளிக்கிறது. இம்மரங்களால் அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சப்படுகிறது. கடந்த வருடம் உயர்நீதி மன்ற மதுரைகிளை கருவேல மரங்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்தது. எனவே, கருவேல மரங்களை உடனே அகற்றமாறு சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: