இன்று ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய இரண்டு மாநில அரசுகள் இதுவரை சி.பி.ஐக்கு வழங்கப்பட்டிருந்த தன்னிச்சையான வழக்கு பதிவிற்கு தடைவிதிக்கவுள்ளது.

மத்திய பா.ஜ.க அரசு ஆந்திரப்பிரதேச மாநில எதிர்க்கட்சிகளின் மூலம் தற்போதைய அரசை கலைக்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு சி.பி.ஐ மற்றும் வருமான வரி துறை போன்ற அரசு அங்கங்களை உபயோகிக்கிறது. இதனால் ஆந்திரா சி.பி.ஐக்கு வழங்கப்பட்டிருந்த தன்னிச்சையான வழக்கு பதிவிற்கு தடைவிதிக்கிறது என அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சி.பி.ஐக்கு வழங்கப்பட்டிருந்த தன்னிச்சையான வழக்கு பதிவிற்கு தடைவிதிப்பதாக அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். மத்திய அரசு அரசின் தன்னிச்சையான நிறுவனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சி.பி.ஐ(CBI)லிருந்து ஆர்.பி.ஐ(RBI) வரை நிறுவனங்களை அனைத்தையும் பேரிடராக மாற்றிவிட்டது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: