ஈரோடு,
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற அச்சத்தில் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகா, வடக்கு தெரு பந்துவக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் எஸ்.ஆனந்தவல்லி வயது 20. இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள சிவசக்தி  பேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் கடந்த நான்கு வருடமாக வேலை செய்து வருகிறார். இதே நிறுவனத்தில் கொடுமுடி வட்டம் சிவகிரி தலையநல்லூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் எஸ்.அஜித்குமார் வயது 22 என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தில் சிவகிரி பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்து செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல், அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அலைக்கழிப்பு
ஈரோடு காவல்நிலையத்தில் ஆனந்தவள்ளி வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை என 3 மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழித்து உள்ளனர். மேலும், மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளனர். பின்னர், ஆனந்தவள்ளி சொந்த ஊர் பகுதியில் உள்ள உள்ளூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பின்பு ஆனந்தவள்ளி குடும்பத்தார் வந்தவுடம் அழைக்கிறோம் என மகளிர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: