திருவண்ணாமலை,

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் பாதுகாப்பு மாநாடு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிதிச்செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். அவரது ஆங்கில உரையை நரசிம்மன் மொழிப்பெயர்த்தார். மாநில தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கை சமர்பித்தார். மாநில பொருளாளர் எம்.சின்னப்பா மற்றும் மாநில நிர்வாகிகள் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.

மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொண்டு ரங்கராஜன் குழுவின் பரிந்துரைப்படி கரும்பு விலையை நிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை மாநில அரசு 12.7.18 ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டம் குறிப்பாக கரும்பு உற்பத்தி செலவை கணக்கில் கொள்ளாத ஆலை முதலாளிகளுக்கு சாதகமான சட்டம். இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டு கரும்புக்கு 1980 முதல் மாநில அரசு வழங்கி வந்த பரிந்துரை விலையை (எஸ்.ஏ.பி.) கைவிட்டுவிட்டனர். இந்த சட்டம் கரும்பு விவசாயிகளுக்கு பாதகமானது. எனவே, 2018 தமிழ்நாடு கரும்பு கொள்முதல் விலை முறைப்படுத்தும் சட்டம் 2018ஐ மாநில அரசு ரத்துசெய்து விட்டு பரிந்துரை விலையை அறிவித்து வழங்கிட வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஜனநாயக இயக்கங்கள் ஆதரவளிக்க வேண்டும். விளை பொருட்களுக்கு சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4000 விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகளின் கடன் ரூ.2500 கோடியாக அதிகரித்து நெருக்கடியில் உள்ளன. ஆண்டுக்கு ரூ.100 கோடிக்குமேல் வட்டி கட்டுவதினால் உற்பத்தி செலவு அதிகரித்து ஆலைகள் சிரமப்படும் நெருக்கடியான நிலைமை உள்ளது. கடன் சுமையிலிருந்து கூட்டுறவு ஆலைகளை மீட்டு பாதுகாப்பதற்கு பதிலாக தனியாரிடம் ஒப்படைத்திட மாநில அரசு முயற்சிக்கிறது. கூட்டுறவு – பொதுத்துறை ஆலைகளை பாதுகாக்க வேண்டும். கடனுக்கான வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், ஆலைகளின் கடனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். 6வது ஆண்டிலிருந்து முதல் சுலபத்தவணையில் கடனை செலுத்த கூட்டுறவு ஆலைகளை அனுமதிக்க வேண் டும். கூட்டுறவு – பொதுத்துறை ஆலைகளை புனரமைத்து மேம்படுத்த கரும்பு மேம்பாட்டு நிதியிலிருந்து குறைந்த வட்டியில் கடனாக பெற்று செயல்படுத்த வேண்டும். பத்தாண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் இணை மின்நிலையை விரிவாக்க திட்டப்பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தை போல வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும்.10 சதவீதம் கட்டுமானத்திற்கு ரூ.2750 என அறிவித்துள்ளார்கள்.

மத்திய அரசு அரை சதவீதம் கட்டுமானத்தை உயர்த்திவிலை நிர்ணயித்திருப் பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். கட்டுமானத்தை உயர்த்தி விலை அறிவித்ததை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.2018-19 ஆண்டுக்கு மத்திய அரசு9.5 சதவீதம் கட்டுமானத்திற்கு ஒரு டன்கரும்புக்கு ரூ.2612.50 விலை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு டன் கரும்புக்கு ரூ.2750 விவசாயிகள் பெற்றனர். இதை விட டன்னுக்கு ரூ.137.50 குறைவாக பெறும்நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே மாநில அரசு கூடுதலாக பரிந்துரை விலையை அறிவித்து வழங்க வேண்டும்.24 தனியார் சர்க்கரை ஆலைகள் 4 ஆண்டுகால எஸ்.ஏ.பி.பாக்கி 1217 கோடியும், கடந்த ஆண்டு மத்திய அரசு விலையில் (எப்.ஆர்.பி.) 150 கோடியும் பாக்கி வைத்துள்ளனர், கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 212 கோடி ரூபாய் எஸ்.ஏ.பி. பாக்கி வைத்துள்ளனர், பலஆண்டுகாலமாக நிலுவையில் உள்ளகரும்பு பண பாக்கியை மாநில அரசுபெற்றுத்தர வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.