கஜா புயல் காரணமாக நேற்று கொடைக்கானல் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதன் காரணமாக சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.  சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்  ரவி, சுந்தரராஜன், ராஜேந்திரன், கார்த்திக் ஆகிய 4 தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி பலியாகியிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சின்னப்பள்ளம் செல்லும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மீட்பு பணியினர் சம்வ இடத்திற்கு செல்வதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும்  மண் சரிவில் சிக்கி பலியானர்வகளை  தீயணைப்பு படையினர் அவர்களின் உடல்களை மீட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: