கோவை,
கோவை கணுவாய் தடுப்பணை பகுதியில் புகுந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை வரப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த இரு காட்டு யானைகள் இரவு கோவை நகரை ஒட்டியுள்ள கணுவாய் தடுப்பணை பகுதிக்குள் நுழைந்தன. அங்கு விவசாயத் தோட்டத்தில் புகுந்த யானைகள், தென்னை, வாழை, சோளப் பயிர்களை சேதப்படுத்தின. மேலும், அங்குள்ள பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகளை உடைத்தன. வனத் துறையின் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் துரித செயல்பாட்டுக் குழுவினர்(ஆர்.ஆர்.டி.) சனியன்று அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாகவும், பொதுமக்கள் அதிகம் கூடியதாலும் யானைகளை விரட்டும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய வன ஊழியர்கள், பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: