ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் கொண்டப்பள்ளி பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நந்திஷ்-சுவாதி தம்பதியர் சுவாதியின் பெற்றோரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆணவப்படுகொலையில் மரணமடைந்த சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு நியாயம் கேட்டு ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் கெளசல்யா உள்ளிட்ட பலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்பு நந்தீஸ்-ஸ்வாதி தம்பதியரின் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் முடித்துவிட்டு ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் அரசியல் மற்றும் சமூக நல செயற்பாட்டாளர்கள் பலரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.