நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரையைக் கடந்த கஜா புயல் புதுக்கோட்டை
மாவட்டம் வழியாகத் திண்டுக்கல் மாவட்டத்து க்குக் கடந்து சென்றது.இதனால் புதுக்கோட்டையில் வெள்ளி அதிகாலை 4மணி முதல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது.

புயலின் அலைக்கழிப்பால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததுடன் மின்மாற்றிகளும் சேதமடைந்தன. சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளதாலும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாலும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

புயல் கடந்து சென்றபோது அறந்தாங்கியில் மேற்குத் திசைநோக்கிப் பலத்த காற்று வீசியதுடன் விடாமல் மழை பெய்தது.இதனால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகளும் சாய்ந்தன.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வீசிய பலத்த காற்றால் வாழை மரங்கள் தலை முறிந்து சாய்ந்தன. திருவெறும்பூர் அடுத்த கிளிக்கூடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பலமாக காற்று வீசி வருகிறது. இதனால், பயிரிடப்பட்டு இருந்த 3000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றின் வேகம் தாளாமல் முறிந்து விழுந்தன.

Leave A Reply

%d bloggers like this: