ஹைதரபாத்:
தெலுங்கானா மாநிலத்தின் இடைக்கால முதல்வர் சந்திரசேகர ராவ், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்து விவரங்களை இணைத்துள்ளார்.

இதில் விஷேசம் என்னவென்றால், தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று ராவ் என்று தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டிலும் இப்படித்தான் கூறியிருந்தார். இதையடுத்து ஊடகங்களும் ‘கார் கூட இல்லாத முதல்வர்’ என்று தற்போது தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால், தனது பெயரில் சொந்தமாக கார் இல்லையே தவிர, ரூ. 22 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக ராவ் கூறியுள்ளார். 91 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதவிர, தன் மகன் கே.டி. ராமா ராவ் பெயரில் ரூ. 84 லட்சம் மதிப்பிலான சொத்துக்கும், மருமகள் கே. சர்மிளா பெயரில் ரூ. 24 லட்சம் மதிப்பிலான சொத்துக்கும் கணக்கு காட்டியுள்ளார்.

இவை எல்லாவற்றையும் முக்கியமாக, தன்னிடம் கார் இல்லை என்று கூறும் இதே சந்திரசேகர ராவ்தான், முதல்வரானதும் அரசு செலவில் 6 சொகுசுக் கார்களில் பவனி வந்தார் என்பதை மறந்துவிட முடியாது. அதில் மூன்று கார்களை கறுப்பு நிறத்திலிருந்து வெள்ளை நிறத்துக்கும் அவர் மாற்றினார். கறுப்பு பதவிக்கு ‘ஆகாது’ என்று ஒரு ஜோசியர் கூறியதற்காக, அரசுப் பணத்தை ஊதாரித்தனமாக செலவிட்டார். அத்துடன் 2015-ஆம் ஆண்டில் தலா 1 கோடி ரூபாய் விலையில் குண்டு துளைக்காத பாதுகாப்பு அம்சத்துடன் நான்கு டொயோட்டா கார்களையும் அரசுப் பணத்தில் வாங்கினார். ஆனால், தற்போது கார் இல்லை என்று எளிமை வேஷம் போட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.