கோவை,
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலும் ஐந்து பேர்உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மெச்சம்மாள் (67). கடந்த 8ம்தேதி கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவருக்கு பன்றிக்காய்ச்சல் வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதனன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், கோவில்மேடு பகுதியை சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் சிவராஜன் (52). இவர் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வியாழனன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், கூடலூர் அத்திப்பள்ளியை சேர்ந்த சாமிதாஸ் என்பவரின் மனைவி பத்மாவதி (70).பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதனன்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதேபோல், பீகார் மாநிலத்தைசேர்ந்த டிக்கி (20) என்ற இளம்பெண்கோவை சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். புதனன்று கடும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழனன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் மகன் நிசார் அகமது புதனன்று மதியம் கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 37 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர், மற்ற வைரஸ் காய்ச்சலுக்கு 89 பேர் என மொத்தம் 132பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: