சேலம்,
சேலத்தில் எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகளுடன் விவசாய கூட்டு குழுவினர் சந்திப்பு நிகழ்ச்சி பனமரத்துப்பட்டி பகுதியில் புதனன்று நடைபெற்றது.

நிலம் எங்கள் உரிமை, விளைப் பொருள்களுக்குக் நியாயவிலை, விவசாய கடன் தள்ளுபடி, எட்டு வழிச்சாலை மற்றும் விமான நிலையம் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும். விளை நிலத்தில் உயர்மின் அழுத்த மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்களின் சார்பில் நவ.29, 30 தேதிகளில் தில்லியில் நடைபயணம்-பாராளுமன்றம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை விளக்கிபனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் விவசாயிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏ.ராமமூர்த்தி, தவிசமாவட்டச் செயலாளர், பி.தங்கவேலு, மாவட்டத் துணைத் தலைவர், பி.அன்பு, விவசாய சங்க பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர்என்கே.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்டச் செயலாளர் வி.அய்யந்துரை, ஏஐகேஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் விவசாயிகளைச் சந்தித்து முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.