ஈரோடு,
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அந்தியூரில் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் உணவுத்திருவிழா நடைபெற்றது.

நவ.14 குழந்தைகள் தினத்தையொட்டி அந்தியூர் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சார்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் ராகிவடை, ராகிதோசை, ராகி பக்கோடா, கம்பு பனியாரம், கம்பு தோசை, ராகி ரொட்டி, கம்பு தோசை, கம்பங்கூழ், பாசிப்பயறு, கோதுமை தோசை அவற்றிற்குரிய சட்னி வகைகள், சுண்டல், உப்புமா, முறுக்கு, கொய்யா, நெல்லி, இனிப்பு, சுக்கு காப்பி என பாரம்பரிய தானியங்களால் சமைக்கப்பட்ட உணவுவகைகளை மாணவ, மாணவிகள் எடுத்து வந்து தங்களுக்குள் பகிர்ந்துண்டனர். மேலும், “மார்டன் கிளாஸ்” என்ற முறையில் டிஜிட்டல் திரையில் பாடங்கள் ஒளிபரப்பு செய்து விளக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் பள்ளித்தலைமை ஆசிரியர் கோ.பாரதி. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆர்.முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வுகள் அப்பகுதி மக்களுடையே பெரும் வரவேற்பை பெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.