புதுதில்லி:
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, மோடி அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அலோக் வர்மாவுக்கும், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் அதிகார மோதல் ஏற்பட்டதால், பிரச்சனையை சுமுகமாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மோடி அரசு காரணம் கூறியது.

ஆனால், அலோக் வர்மா-வின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக, மோடி அரசுதான் ராகேஷ் அஸ்தானாவை நியமித்தது என்பதால், அது கூறிய காரணத்தை யாரும் நம்பவில்லை. ரபேல் ஊழல் விசாரணையை தடுப்பதற்காகவே அலோக் வர்மா பழிவாங்கப்பட்டு இருக்கிறார் என்பது நாடறிந்த ரகசியமாகி விட்டது.இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமியின் வாக்குமூலமும் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. அலோக் வர்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக சுப்பிரமணியசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“அலோக் வர்மா தில்லி காவல்துறை ஆணையராக இருந்தபோதே அவரைத் தெரியும்; அவர் ஏர்செல் – மேக்சிஸ் மற்றும் பிற வழக்குகளில் சிபிஐ சார்பில் பணிபுரிந்ததைப் பார்த்திருக்கிறேன்; அவர் ஒரு நேர்மையான மனிதர்; அவருக்கு எதிராக ஏராளமான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது; ஊழலுக்கு எதிரான நமது பிரச்சாரத்தை இது காயப்படுத்துகிறது; உச்ச நீதிமன்றம் அவருக்கு நியாயம் வழங்கும் என்று நம்புகிறேன்” என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: