ஈரோடு,
பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு சிறுமிகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடக்கோரி ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜலட்சுமியை பாலியல் வன்கொலை செய்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரூர் அருகே பழங்குடி மாணவி சௌமியா கும்பல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணமான குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர், மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் ஈரோடு தாலுகா தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பி.பி.பழனிச்சாமி, சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் எம்.சசி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், சிபிஎம் தாலுகா செயலாளர் எம். நாச்சிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் மாணிக்கம், மாதர்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.எஸ். பிரசன்னா, நகர செயலாளர் வி.சுரேஷ்பாபு, மாணவர் சங்கத்தின் நிர்வாகி ஜி. கோபிநாதன் உட்பட பலர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.