சேலம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் நான்காம் மாநில பேரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகம் முழுவதும்  அனைத்து கிளைகளிலும்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய்க்கு 9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஓய்வூதியர் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
  ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலைவர் இல.கலைமணி தலைமையில் நடைபெற்றது  எம். சின்னசாமி, பி.குமார், முன்னிலை வகித்தனர்.எ .கமால் கான், வரவேற்புரையாற்றினார். டி. பட்டாபிராமன், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி ,எம். கலைமணி மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜி, ஊரக வளர்ச்சி மாவட்ட தலைவர் வாசுதேவன், எஸ்.கணேசன் பி எஸ் என்எல்.மாவட்ட செயலாளர் ஹரிகரன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் கே தியாகராசன் சிறப்புரையாற்றினர்.  எம்.தங்கவேல் நன்றி கூறினார், சுமார் என்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெத்த நாயக்கன்பாளையம்
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஆர். தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இ. கோவிந்தராஜி, சி.கே.ராமச்சந்திரன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயலாளர் எ. கலியபெருமாள், மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகி கந்தன், காளிதாஸ், சங்க சங்க செயலாளர் சிவராமன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.