கோவை,
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவிலட்சுமி (35). இவர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 12 ஆம் தேதியன்றுகோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பன்றிகாய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் புதனன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதேபோல், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் மருதாச்சலபுரத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ். பாலு (55). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள போயம்பாளையம் அபிராமி திரையரங்கத்தை நடத்தி வருகிறார்.

மேலும், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரிமாவட்டங்களின் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் பாலு கடந்த 3 வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பன்றிக் காய்ச்சல்தீவிரமாகவே தனியார்மருத்துவமனையில் இருந்துகோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் 45 பேரும், டெங்குகாய்ச்சல் பாதிப்பில் 5 பேர் உட்பட மொத்தம் 111 பேர்காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: