திருப்பூர்,
திருப்பூரில் குழந்தைகளிடம் கண்ணுக்குத் தெரியாமல் பல வழிகளிலும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து இருப்பதாக சைல்டு லைன் அமைப்பினர் தெரிவித்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைல்டு லைன்அமைப்பு சார்பில் நவம்பர் 14ஆம் தேதிமுதல் 20ஆம் தேதி முடிய சைல்டுலைன் நண்பர்கள் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்கமாக திருப்பூர் சைல்டு லைன் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சைல்டு லைன் நோடல் நிறுவனமாகச் செயல்படும் மரியாலயா அமைப்பின் திட்ட இயக்குநர் லூர்து சகாயம், கூட்டு நிறுவனமாகச் செயல்படும் சிஎஸ்இடி அமைப்பின் திட்ட மேலாளர், சைல்டு லைன் இயக்குநர் பாஸ்கரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:குழந்தைகள் பாதுகாப்பு, மறுவாழ்வுக்கு சைல்டு லைன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம்குழந்தைகள் தொடர்பான புகார்களைத் தெரிவித்தால், சைல்டு லைன்அமைப்பு அந்த குழந்தைகள் மீட்பு,பாதுகாப்பு, மறுவாழ்வுக்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் இணைந்துநடவடிக்கை மேற்கொள்ளும்.உளவியல் பாதிப்பில் குழந்தைகள்சைல்டு லைன் அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படத் தொடங்கி 10ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தைகள் பாதுகாப்பு, உரிமை தொடர்பான விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை குறையவில்லை. பொதுவாகவே சமீப காலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. இதில் குழந்தைகள் மீதான வன்முறையும் அதிகரித்துள்ளது.குழந்தைப் பருவத்தில் உளவியல்ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் வெளிப்படுத்த முடியாமல் தேக்கி வைக்கப்பட்டு, பிற்காலத்தில் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டு, வன்முறையாக வெடிக்கிறது.

திருப்பூரில் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்றன. குறிப்பாககுழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த தற்கொலைகளுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், குழந்தைப் பருவத்தில் அவர்கள் சந்தித்த வன்முறைகள் இதற்கான தூண்டுதலாக உள்ளன.போதை பழக்கம் அதிகரிப்புஅதேபோல் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் குழந்தைகள் மத்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. டாஸ்மாக்மதுப்பழக்கம் நேரடியாக இருப்பதில்லை. ஆனால் வேறு விதமான போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது பற்றிசமூக விழிப்புணர்வு போதிய அளவுஇல்லை. நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்களில் குழந்தைகள் கவனிப்புக்கு நேரம் ஒதுக்கமுடிவதில்லை. கவனிப்பு கிடைக்காத குழந்தைகள் இது போன்ற போதை பழக்கங்களில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. பல விதங்களில் தொடரும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இன்னும்கூட கவனத்துக்கு வராமல் இருக்கிறது.குழந்தை திருமணங்கள்திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10மாத காலத்தில் சைல்டு லைன் மூலம்109 குழந்தை திருமணங்கள் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளன. எல்லா மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் குழந்தை திருமணங்கள் செய்து வைக்கும் நிலை இருந்தாலும், குறிப்பாக பொருளாதாரரீதியாக வறுமையான குடும்பங்களிலேயே இப்போக்கு அதிகமாக உள்ளது.குழந்தைகள் பாலியல் கவர்ச்சி, காதல் என்ற பெயரில் ஓடிப் போய்விடுவார்கள் என்ற அச்சத்தில் இதுபோன்ற திருமணங்களை செய்து வைப்பதாக பெற்றோர் மத்தியில் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் ஒதுக்காத நிலையே அவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்குவதற்கு காரணமாகிறது.திருப்பூரில் ஒரே அறையில் பெற்றோர், குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் நிலையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.பள்ளிகளில் வன்முறைபள்ளிகளில் மாணவர்களை அடிக்கும் சம்பவங்கள் குறித்து சுமார் 50 வழக்குகள் கவனத்துக்கு வந்தது. அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில்தான் மாணவர்கள் மீதான உடல்ரீதியான வன்முறை அதிகம் நடைபெறுகிறது. வகுப்பறைகளில் பேசுகிறார்கள், சரியாகப் படிப்பதில்லை என அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது.

 

ஆனால், வகுப்பறைகளில் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், படைப்பாற்றலுடன் பாடங்களை சொல்லிக் கொடுத்தால் இதுபோன்ற வன்முறைகள் தேவையில்லை.16 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 10மாதங்களில் 72 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பள்ளிவிடுமுறை காலங்களில் 2, 3 மாதங்கள்வேலைக்குப் போனால் வருமானம் கிடைக்கிறது என பல பணிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் வருமானம் சம்பாதிப்பதில் ஈர்ப்பு ஏற்பட்டு படிப்பைக் கைவிடும் நிலை ஏற்படுகிறது.திருப்பூரில் வட மாநிலங்களில் இருந்து 20 சதவிகித தொழிலாளர்கள் வேலைக்கு வந்துள்ளனர். அவர்களில் இளம்பருவ சிறுமிகள் வேலை வாங்கப்படுகின்றனர். இந்த பருவத்தினரை நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். 3 மணி நேரத்துக்கு ஒரு முறை இடைவேளை தர வேண்டும் என உள்ளது. ஆனால் இங்கு 12 மணிநேரம் வேலை என்ற நிலை பழக்கமாகிவிட்டது.

குழந்தை உழைப்பைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை இன்னும் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.கம்பெனிகளில் உற்பத்தியில் மட்டுமே நிர்வாகங்கள் கவனம் செலுத்துகின்றன. குழந்தை பருவம் பாதிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய பல்வேறு உளவியல் பிரச்சனைகளை கருத்தில் கொள்வதில்லை. குரலற்ற குழந்தைகளின் பிரச்சனைகளை சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இத்துடன், சைல்டு லைன் நண்பர்கள் வாரத்தில் ஏழு நாட்களுக்குமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை திருமணம் பற்றிய வழக்காடு நிகழ்ச்சி, மனித சங்கிலி, விழிப்புணர்வு கூட்டம், வீதி நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சைல்டு லைன் மைய ஒருங்கிணைப்பாளர் கதிர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.