கோவை,
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரலுக்கென பிரத்யோகமான முழு பரிசோதனை வசதி புதனன்று துவக்கி வைக்கப்பட்டது. பி.எஸ்.ஜி மருத்துவமனையின் முதல்வர் எஸ்.ராமலிங்கம், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர்தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்வில் இந்தியாவின் பார்முலா ஒன் கார்பந்தய வீர்ரான நரேன் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசோதனையை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவின் இயக்குநர் ராமநாதன் பேசியதாவது, மனித உடலிலுள்ள உள்ள உறுப்புகளில் நேரடியாக சுற்றுப்புறத்தால் பாதிக்கப்படுவது நுரையீரல் மட்டுமே. மாரடைப்புக்கு அடுத்து மக்கள் அதிமாக இறக்க காரணமாக இருப்பது நுரையீரல் பாதிப்பே ஆகும். மற்ற நோய்களை போன்று ஆரம்ப நிலையில் நுரையீரல் புற்று நோயானது அறிகுறியை வெளிப்படுத்துவதில்லை. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் அதிக அளவில் பஞ்சாலைகள் இருப்பதால் சுற்றுப்புறத்தால் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட அதிகவாய்ப்புள்ளது. அதனால் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு நுரையீரல் பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.