திருப்பூர்,
திருப்பூர் அருகே அருள்புரம் பகுதியில் இந்து முன்னணி குண்டர்கள் பேன்ஸி கடையை அடித்து நொறுக்கியதுடன், அப்பகுதியில் இருந்த பொது மக்களுக்கும் கொலை மிரட்டல்விடுத்து அட்டகாசம் செய்தனர்.

இந்த சம்பவத்தில் இந்து முன்னணியின் நிர்வாகியான முக்கிய குற்றவாளியை விட்டுவிட்டு அந்த அமைப்பைச் சேர்ந்த 4 குண்டர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட அருள்புரத்தில் பாண்டியராஜன் என்பவர் சிடி கடை நடத்தி வருகிறார். இவர் பாரத் சேனா என்ற அமைப்பில் நிர்வாகியாக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த 11ஆம் தேதி ஞாயிறன்று அப்பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகைதந்த அவரது அமைப்பின் மாநிலத் தலைவரை வரவேற்று கொடிகள் கட்டியிருக்கிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியின் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய பூவை கார்த்தி தலைமையில் இந்து முன்னணியைச் சேர்ந்த 5 பேர் கும்பல் ஞாயிறு மதியம் பாண்டியராஜனின் சிடி கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாத நிலையில்அவரது தந்தை மட்டும் இருந்திருக்கிறார். அவரிடம் பாண்டியராஜன் எங்கள் பகுதியில் பாரத் சேனா கொடி நடுவதா, எங்களை மீறி இப்பகுதியில் செயல்பட்டால் சும்மாவிட மாட்டோம் என்றும், மகனை பார்த்து இருக்கச் சொல் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதைக் கேட்ட பாண்டியராஜனின் தந்தை வயதான தன்னிடம் மரியாதைக் குறைவாக பேசுவதா என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதைப் பொறுக்காத இந்து முன்னணி குண்டர்கள் அவரை இழுத்துப் போட்டு அடித்ததுடன், சிடி கடையையும்நொறுக்கி சூறையாடியுள்ளனர்.இந்த சமயத்தில், சிடி கடைக்கு எதிரில் பேன்ஸி கடை வைத்திருக்கும் அர்ஜூனன் என்பவர் தனதுமகன் பாபுவுக்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார். இதைப் பார்த்த இந்து முன்னணி குண்டர்கள், காவல் துறைக்குத்தான் தகவல் சொல்கிறார் எனபுரிந்து கொண்டு பேன்ஸிகடைக்கு வந்து அர்ஜூனனையும் தாக்கி, பேன்ஸி கடையையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.பட்டப்பகலில் பலரும்வாகனங்களில் சென்று கொண்டிருந்த நேரத்தில் இந்த அட்டகாசம் செய்ததைப் பார்த்து சிலர் எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்து முன்னணி குண்டர்கள் கொலை மிரட்டல் விடுத்ததுடன், அப்படித்தான் செய்வோம், மீறி எங்களை கேள்வி கேட்டால் உனது வீட்டில் மனைவியையும் கொலை செய்வோம், பேசாமல் போய்விடு என மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பல்லடம்காவல் நிலையத்தில் இந்து முன்னணியின் நிர்வாகியான பூவை கார்த்திஎன்பவர் உள்ளிட்ட குண்டர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.ஆனால் காவல் துறையினர் பூவை கார்த்தியை விட்டுவிட்டு, இந்து முன்னணியைச் சேர்ந்த வேலு, பிரபு, விநாயகம் மற்றும் மணிமாறன் ஆகிய நான்கு பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது மக்கள் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளதை வைத்து அவர்கள் மீது மட்டும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேசமயம் இதில் தலைமை ஏற்று வந்து வன்முறையை நடத்திய முக்கியகுற்றவாளியான, பூவை கார்த்தி மீதுகாவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.அத்துடன் பட்டப்பகலில் இந்துமுன்னணி குண்டர்கள் நடத்திய அராஜக அட்டூழியம் இப்பகுதி மக்கள்மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் உறுதியான நடவடிக்கை எடுத்து அனைத்து குற்றவாளிகளையும் சட்டப்படி தண்டிக்காவிட்டால் நாங்கள் தைரியமாக நடமாட முடியாது. எனவே அரசுஇந்த சமூக விரோதிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.