பொள்ளாச்சியில் குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மாமியாரை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு சிடிசி காலனியில் சுமதி (42)கணவரை பிரிந்து தனது அம்மா விசாலாட்சியுடன் 2 வருடங்களாக வசித்து வருகிறார் பாபுக்கும் சுமதிக்கும் 15 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமதியின் வீட்டுக்குள் சுவர் ஏறி உள்ளே சென்ற பாபு, கதவை உடைத்து மாமியார் விசாலாட்சி மற்றும் மனைவி சுமதியையும் கழுத்தை அறுத்தும் கொன்று விட்டு பாபு துணி கயிற்றின் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மனைவி மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சியில்  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: