புதுதில்லி:
மத்திய அரசுக்கு எதிராக, மத்தியப் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், ஜனவரி மாதம் போராட்டம் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்புத் துறையை தனியார் மயமாக்குவதற்குக் கண்டனம் தெரிவித்து, ஜனவரி 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு இப்போராட்டம் நடைபெறும் என்று ராணுவப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

எதைத் தனியார் மயம், உலகமயம் ஆக்க வேண்டும்; எதை ஆக்கக் கூடாது என, பிரதமர் மோடிக்கு தெரியாது என்றெல்லாம் கூற முடியாது. மோடி தெரிந்தேதான் எல்லாவற்றையும் செய்து மோசமான புதிய இந்தியாவை தயாரிக்கிறார். எனவேதான், இராணுவத்திற்கான ஆயுதங்களை தயாரிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புத்துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்க உள்ளனர் என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: