புதுதில்லி:
மத்திய அரசு, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் ஜெட் விமானங்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதியரசர்கள் எஸ்.கே. கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோரடங்கிய அமர்வாயம் இது தொடர்பாக அரசின் சார்பில் முத்திரையிடப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட செய்யப்பட்ட விலை விவரங்களை புதனன்று ஆராய்ந்தது.

வழக்கு விசாரணையைத் தொடங்கிய வழக்குரைஞர் மனோகர் லால் ஷர்மா நீதிமன்றத்தில் வாதிடுகையில், இரு நாட்டின் ரபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பாக அரசாங்கத்திற்கிடையேயான (inter-Government) ஒப்பந்தம் “சட்டவிரோதமானது” என்றும், எனவே இது தொடர்பாக புலன்விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் ஷர்மாவைத் தொடர்ந்து மற்றொரு வழக்குரைஞர், வினீத் தண்டா என்பவரும் தன் வாதத்தைப் பதிவு செய்தார்.

மத்திய முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷௌரி மற்றும் சமூக ஆர்வலரும், மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் ஆகியோர் கூட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்கள். ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் அவர்களும் ஒரு மனு தாக்கல் செய்தார். சஞ்சய் சிங் வாதிடுகையில், 2015 மார்ச் 25இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் 126 விமானங்கள் வாங்குவதில் 108 ஜெட் விமானங்கள் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது என்று கூறினார்.

மத்தியஅரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், 2016 செப்டம்பரில் 36 ஜெட் விமானங்கள் வாங்குவது தொடர்பாக, பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியால் இறுதிப்படுத்தப்பட்டு கையெழுத்தாகியிருக்கக்கூடிய நிலையில், 2015 ஏப்ரலிலேயே நம் நாட்டின் பிரதமரும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரன்காஸ்ஸ் ஹாலண்டேயும் இது தொடரபாக கூட்டு அறிக்கை வெளியிட்டார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மனுதாரர்கள் விரும்பினார்கள்.

மத்திய அரசு 36 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு உதவுவதற்காக, விமானப்படை அதிகாரிகள் ஏர் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி மற்றும் இரு அதிகாரிகள் ஆஜரானார்கள்.பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ரபேல் ஒப்பந்தமானது ராணுவ கொள்முதல் நடைமுறை (Defence Procurement Procedure) அளித்துள்ள மூன்று முக்கிய நிபந்தனைகளைப் பின்பற்றவில்லை என்றார்.

“36 விமானங்களை வாங்குவதற்கான தீர்மானத்தை யார் மேற்கொண்டது? எந்த அடிப்படையில் பிரதமர் 36 ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தார்? அவருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. எப்படி, 126 ஜெட் விமானங்கள் 36 ஜெட் விமானங்களாகக் குறைக்கப்பட்டது?” என்று கேள்விக்கணைகளை அடுக்கினார்.36 ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றரை ஆண்டுகளாகிவிட்டன. எனினும் இதுவரை ஒரு விமானம் கூட வரவில்லை.பின்னர் இரு தரப்பிலும் விசாரணைகள் முடிந்தபின், தீர்ப்புக்காக ரிசர்வ் செய்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.