புதுதில்லி:
அக்டோபர் மாதத்தில் மொத்த விலைகள் அடிப்படையிலான பணவீக்கம் 5.28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைக் குறியீடு 4.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது; இயற்கை எரிவாயு, முந்தைய மாதத்தில் இருந்த 95.9 சதவிகிதத்திலிருந்து 99.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல, எரிபொருள் மற்றும் சக்திக்கான குறியீட்டு எண், முந்தைய மாதத்தில் 107.2 சதவிகிதமாக இருந்தது, தற்போது 3.6 சதவிகிதம் உயர்ந்து 111.1 சதவிகிதமாகி இருக்கிறது. நிலக்கரி விலைக் குறியீட்டு எண் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது; உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான குறியீட்டு எண்ணும் முந்தைய மாதத்தில் 129.4 சதவிகிதமாக இருந்ததில் இருந்து 129.5 சதவிகிதமாக 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையிலான (WPI) பணவீக்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாவும், அக்டோபரில் 3.68 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: