திருப்பூர்,

திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா பேசியதாவது :- தமிழகத்தில் சிறுமி, பெண்கள், வயதானவர்கள் போன்றோர்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் திருப்பூரில் கடந்த நவ 1 ஆம் தேதி 4 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாமல் உள்ளனர். இந்த இந்நிலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரி மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிமறுக்கப்படுகிறது. போராட்டம் நடத்த அனுமதி கேட்ட மாதர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் பானுமதியை தொலைபேசியில் அழைத்தவடக்கு மகளிர் காவல் நிலையஆய்வாளர் கலையரசி குற்றவாளிகள் உங்களுக்கு தெரியும். எங்களிடம் அடையாளம் காட்டுங்கள், இதுதொடர்பாக விசாரணைக்கு வாருங்கள்’ என அழைத்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.சமீப காலங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல் துறையினர், அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். போயம்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் பாண்டியன் நகரில் அனுமதி கொடுக்கிறார்கள்.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருப்பூர் துணை ஆணையரை சந்தித்து, பெண்களை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். சமீபத்தில் சேலத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும் ராஜலட்சுமியின் தலையை வெட்டி சாலையில் வீசப்பட்டது. இதையறிந்த மாதர் சங்கம் போராட்டம் நடத்தினர். இதனால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் முதலமைச்சரின் தொகுதியான ஜலகண்டாபுரத்தில் 3 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். இதனால் நிமிடத்திற்கு நிமிடம் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஆளும் அரசுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. தற்போது மீ டூ இயக்கத்தை ஆரம்பித்து அதில் பாதிக் கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, திருப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யும்வரை மாதர் சங்கம் தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.