சிட்னி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.ஹேஸ்டிங்ஸின் திடீர் ஓய்வு முடிவு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்,ஓய்வு முடிவு குறித்து ஹேஸ்டிங்ஸ் தானாகவே விளக்கம் அளித்துள்ளார்.அந்த விளக்கத்தில்,”பந்துவீசும் பொழுது நுரையீரலில் ரத்தக் கசிவு பிரச்சனை காரணமாக ரத்த வாந்தி எடுத்தேன்.சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் ரத்தக் கசிவு ஏற்படாது என்பதற்கு மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை.இதனால் மீண்டும் பந்துவீசும் போது மைதானத்திலேயே ஏதாவது நடந்து விடுமோ என்ற பயத்தினால் தான் இந்த ஓய்வு முடிவை அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.ஜான் ஹேஸ்டிங்ஸ் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில்தான் விளையாடியுள்ளார்.ஆனால் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு,வருடாந்திர விக்கெட்டுகளில் சாதனைப் படைத்துள்ளார்.9 டி-20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஜான் ஹேஸ்டிங்ஸ் மிதமான வேகத்தில் தான் பந்துவீசுவார்.ஆனால் ஸ்டெம்பை பதம் பார்க்கும் நோக்கில் தான் அவரது பந்துகள் சீறும்.இவரது பந்தை எதிர்கொள்ள ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.