திருவனந்தபுரம்

கேரளாவில் காகம் ஒன்று தனக்கு பிடித்த அயிலை மீனை கேட்டு வாங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் மீன் வியாபரி காகத்திற்கு தினமும் மீன் கொடுத்து பழக்கப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் காகம் வியாபரியிடம் மீன் கேட்டு கரைத்து உள்ளது. அப்போது காகத்திற்கு மத்தி மீனை கொடுத்துள்ளார். காகம் வாங்க மறுத்தது. இதனையடுத்து மற்ற மீன்களை கொடுத்தும் வாங்கவில்லை. வியாபரி அயிலை மீன் விலை அதிகம் மற்ற மீனை எடுத்துக்கோ என சொல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அயிலை மீனைத்தவிர மற்ற மீன்களை வாங்க மறுத்து கடைசியாக அயிலை மீனை வாங்கிச்செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.