சென்னை,
4ஜி ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்க வலியுறுத்தி டிச.3ந் தேதியிலிருந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

2017 ஜனவரி முதல் ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஒய்வூதியம் பிடிக்க வேண்டும்,ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஓய்வூதியபலன்களை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதனன்று (நவ.14) மாநில, மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை மாநிலம் சார்பில் கிரீம்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மனித சங்கிலி நடைபெற்றது.

இந்தப்போராட்டத்தில் பேசிய பிஎன்எல்இயு தமிழ்நாடு மாநில தலைவரும், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான செல்லப்பா பேசுகையில், “ஊழியர்களின் கோரிக்கைகள் மீது நவ.30க்குள் நடவடிக்கை எடுக்காவிடில், டிச.3 முதல் வேலை நிறுத்தம் நடைபெறும். அரசின் திட்டங்களான நேஷனல் ஆப்டிக்பைபர் நெட்வொர்க் (என்ஓஎப்என்), நெட்வொர்க் பார் ஸ்பெக்ட்ரம் (என்எப்எஸ்), மற்றும் லெப்ட் விங் எஸ்ட்ரீமிசம் (எல்டபிள்யுஇ) ஆகிய திட்டங்களையும் புறக்கணிக்கப்படும். பிஎஸ்என்எல் மட்டுமல்ல தனியார்தொலை தொடர்பு நிறுவன சேவைகளையும் நிறுத்துவோம்” என்றார்.இப்போராட்டத்திற்கு என்எப்டிஇ தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பிஎஸ் என்எல்இயு பொருளாளர் சீனிவாசன் மற்றும் வளவனரசு(எஸ்என்இஏ), துரையரன் (ஏஐபிஎஸ்என்எல்இஏ) உள்ளிட் டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.