புதுதில்லி:
சபரிமலையில் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களுக்கான வழிபாட்டு உரிமைக்கு தடை கோரிய மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜனவரி 22 வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஜனவரி 22 வரை காத்திருக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கேட்டுக்கொண்டார்.

அதற்கு முன்பு வாதம் கேட்க முடியாது எனவும் தலைமை நீதிபதி கூறினார். வழக்கறிஞரான மாத்யூ நெடும்பாற இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். சீராய்வு மனுக்களை ஏற்க வேண்டும், அமலில் உள்ள உச்சநீதிமன்ற உத்தரவு தடை செய்யப்பட வேண்டும், திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று முன்வைக்கப்பட்டன. ஆனால் தீர்ப்பை தடை செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த பின்னணியில் மாத்யூ நெடும்பாறயின் மனுவை புதனன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.