லண்டன்
டெஸ்ட்,ஒருநாள்,டி-20 என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பரம எதிரி பாகிஸ்தானாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் மீது தனி கவனம் செலுத்தி அந்த அணியை முக்கிய தொடர்களில் பந்தாடி வருகிறது.இதனால் இந்திய அணியின் புதிய எதிரியாக ஆஸ்திரேலிய அணி வர்ணிக்கப்படுகிறது.

இந்நிலையில்,இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தியா-ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.அந்தக் கருத்தில்,”இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் ஆஸ்திரேலிய வீரர்களிடம் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கோலி நடப்பாண்டு ஒருநாள் போட்டிகளின் சராசரியாக 133.55 புள்ளிகளையும்,10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1063 ரன்களை குவித்துள்ளார்.இந்த ஆண்டில் கோலி அடித்த 4 டெஸ்ட் சதங்களில் 3 சதங்கள் வெளிநாட்டில் அடிக்கப்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.முதலில் கோலியை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணி தனி கவனம் செலுத்தி புதிய உத்திகளைக் கையாள வேண்டும்.அதன்பிறகு தான் வெற்றி தோல்வி குறித்துச் சிந்திக்க முடியும்” எனத் கூறியுள்ளார்.

ஏற்கெனவே ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் இல்லாமல் இந்திய அணியை எப்படிச் சமாளிக்க போகிறோம் என்ற கலக்கத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு மைக்கேல் வாகனின் கருத்து புதிய பீதியை உருவாகியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் வரும் நவம்பர் 21-ஆம் தேதி துவங்கவுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.