தமிழகம்,
கஜா புயல் அறிவிப்பையொட்டி நாளை 7 மாவட்ட பள்ளிகளுக்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 490 கி.மீ தொலைவில் கஜா புயல் நிலை கொண்டுள்ளது. நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வடகிழக்கு பருவமழைக்காக 32 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை, கஜா புயல் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கடலூர் – ககன்தீப் சிங் பேடி, நாகை – டி.ஜவஹர், புதுக்கோட்டை – சம்பு கல்லோலிக்கல், ராமநாதபுரம் – சந்திரமோகன், திருவாரூர் – மணிவாசன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யபட்டு உள்ளனர். கஜா புயல் எதிரொலியாக திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: