வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக வெறுப்பினால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்தபடியே உள்ளன. 2017ஆம் ஆண்டில் மட்டும் 7175 வெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் இது 6121 என்ற அளவில் இருந்ததாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கருப்பினத்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிராகவே இவ்வகை குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக அந்த அமைப்புகள் விவரிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.