வேலூர்,
விஐடி பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடைபெறும் அறிவியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய 17வது சர்வதேச மாநாட்டை இந்தியாவிற்கான ஈக்வெடார் நாட்டு அரசு தூதர் ஹெக்டர் குயிவா ஜாகோம் தொடங்கி வைத்தார்.

விஐடி கட்டிட பொறியியல் பள்ளி ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாடு தொடக்க விழா விஐடியிலுள்ள டாக்டர் எம்.சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது. விஐடி கட்டிட பொறியியல் பள்ளி டீன் முனைவர் எஸ்.கே.சேகர் வரவேற்றார். மாநாடு நோக்கம் பற்றி அமைப்புக் குழு செயலாளர் முனைவர் டி.மீனா விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கு விஐடி துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் தலைமை வகித்தார். இந்தியாவிற்கான ஈக் வெடார் நாட்டின் தூதர் ஹெக்டர் குயிவா ஜாகோம் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டினை தொடங்கி வைத்தும் மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டும் பேசினார். விஐடி இணைத் துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் பேராசிரியைகள் எஸ்.பரிமளா ரெங்கநாயகி ஏ.சோபி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.