காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து கடந்த 50 நாட்களாக நடைபெற்று வந்த ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்குவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் ஒரகடம் மற்றும் வல்லத்தில் செயல்பட்டு வந்த ராயல் என்பீல்டு தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 50 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தொழிலாளர் நலத்துறை வழங்கிய அறிவுரையை ஏற்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்திவந்த நிலையில் கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழிற்சங்கம், ராயல் என்பீல்டு நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் காஞ்சிபுரம் சாராட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், ராயல் என்பீல்டு நிர்வாகத்தின் மனிதவள பொது மேலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பவும், தொழிலாளர் களுக்கு நிர்வாகம் உரிய ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தொழிற்சங்கத்தின் சார்பில் உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் துணைத் தலைவர் ஆர்.சம்பத், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரின் 27.09.2018 மற்றும் 03.10.2018 ஆகிய தேதிகளில் வழங்கிய  அறிவுரையை இருசாராரும் ஏற்க வேண்டும், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட எட்டு நாள் ஊதியத்தை திரும்பத்தர வேண்டும், நிர்வாகத்தால் அறிவிக்கப் பட்ட 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸை அனைத்துத் தொழி லாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தொழிலாளர் துறை முன் தொடர்ந்து பேசி சமரச தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

வேலை நிறுத்தம் முடிந்து பணிக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு தங்களது மொபைல் போனைப் பாதுகாப்பாக வைக்க நிர்வாகம் பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தரவேண்டும். அதுவரை தற்காலிக வசதி செய்து தரப்படும், வருகைப்பதிவேடு இயந்திரத்தில் தங்களது வருகையைப் பதிவு செய்யத் தொழிலாளர்கள் தரப்பில் விண்ணப் பம் அளித்தல், பிடித்தம் செய்யப்பட்ட எட்டு நாள் ஊதியம் குறித்து வேலைக்குத் திரும்பிய பின்னர் முடிவு
செய்தல், 2017-18 ஆம் அண்டிற்கான அறிவிக்கப்பட்ட போனஸை வேலை நிறுத்தம் முடித்து பணிக்கு திரும்பிய பின்னர் வழங்குதல், நிர்வாகத் தரப்பில் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும் அசோசியேட்ஸ் என்ஜினியர், தகுதி கான் பருவத்தினர்
மற்றும் 3ஆம் ஆண்டு பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது, பணிக்குத் திரும்பும் தொழி லாளர்கள் மீது வேலை நிமித்தமாக தற்காலிக பணி நீக்கமோ அல்லது நிரந்தர பணி நீக்கமோ செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் செவ்வா
யன்று (நவ. 13) பணிக்குத் திரும்பியுள்ளனர்.

நாளை யமஹா பேச்சுவார்த்தை
என்பீல்டு ஆலை தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் புதனன்று (நவ. 14) மாவட்ட, ஆட்சியர் அலுவலகத்தில் யமஹா தொழிலாளர் பிரச்சனை குறித்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.