திருப்பூர்,
திருப்பூரில், அனைவருக்கும் சொந்த வீடு வழங்கும் செந்தில் நகர் என்ற நிறுவனம் திருப்பூர்மாநகரம் முழுவதும் 120க்கும் மேற்பட்டோரிடம் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் இடுவாய், சின்னகாளிபாளையம் பகுதியில் செந்தில் நகர் என்ற நிறுவனம் சொந்த வீடுகள் கட்டி தருவதாக கூறினர். இதையறிந்த 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்பணமாக ரூ.90 லட்சம் கொடுத்தனர். ஆனால் பணத்தை பெற்று கொண்டு இடத்தை கொடுக்கவில்லை. மேலும் ஒரு இடத்தின் பேரில் பலரிடம் பணம் பெற்று உள்ளனர். இதையறிந்த பொதுமக்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பி தராமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடிப்பு செய்துள்ளனர். இந்நிலையில், செந்தில்நகர் புரமோட்டர்ஸிடமிருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரியும், மோசடி செய்தவர்களை கைது செய்ய கோரியும் செவ்வாயன்று ஐம்பதுக்கு மேற்பட்டோர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆணையாளர் மனோகரன் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மனு கொடுத்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: