அகர்தலா:
திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் என்றாலே, மண்டையைப் பிளந்து வெளியே கொட்டும் அளவிற்கு மூளை உள்ளவர் என்று பெயரெடுத்தவர். முதல்வராக பதவியேற்றது முதல், இப்போதுவரை உளறிக்கொட்டாத ஒரு பேச்சையோ, பேட்டியையே அவர் அளித்ததில்லை. அந்த வகையிலேயே மே தின விடுமுறை தொடர்பாகவும் பேசியுள்ளார்.2019-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை திரிபுரா மாநில பாஜக அரசு அண்மையில் வெளியிட்டது. அதில் தொழிலாளர் தினமான மே 1-அன்று அளிக்கப்பட்டிருந்த விடுமுறை நீக்கப்பட்டு இருந்தது. கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில் அது வைக்கப்பட்டது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மே 1 விடுமுறை ரத்து பற்றி திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்கள் மட்டுமே தொழிலாளர்கள்; அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் அல்ல” என்றும், “எனவே, அவர்களுக்கு ‘மே 1’ அன்று விடுமுறை தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.நான் என்ன அரசு ஊழியனா? நான் மாநில முதல்வர். அரசு கோப்புகளை கையாளும் நீங்கள் பணியாளர்கள். நீங்கள் தொழிற்சாலையிலா வேலை பார்க்குறீர்கள்? உங்களுக்கு ஏன் விடுமுறை? விடுமுறை இல்லை என்றால் நீங்கள் ஏன் துக்கப்படுகிறீர்கள்?” என்றும் அரசு ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அத்துடன், ‘மே தினத்திற்கு விடுமுறை அளிப்பதை நான் எங்குமே கண்டதில்லை’ எனவும், விடுமுறைக்கான தேவை என்ன இருக்கிறது? என்பது தெரியாமலேயே இடதுசாரிகள் மே 1 விடுமுறையை அறிவித்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: