புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செல்லும் சாலையில் லேனா விலக்கில் செந்தூரான்
பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியை சேர்ந்த தாளாளரின் மகன் கடந்த ஆண்டு நவம்பர் , டிசம்பர் மாதம் இக்கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில், தனக்கு பதிலாக மற்றொரு மாணவரை எழுதச்செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கல்லூரியின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

மேலும் 3 கல்லூரிகளில் அதிக அளவில் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த 3 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் எந்த தேர்வுக்கும் மேற்பார்வை யாளராக நியமிக்கப்படவும் அண்ணா பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. மறு மதிப்பீடு முறையிலும் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

செந்தூரான் கல்லூரி அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ள
தால் அக்கல்லூரியில் படிக்கும் ஆயிரக்கணக் கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மற்ற கல்லூரிகளில் சேர்ப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.