ஈரோடு,
பயோமெட்ரிக் மூலம் மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் முதற்கட்டமாக 50 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: