ஈரோடு,
சொத்துவரி உயர்வை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொடுமுடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். 100 சதவிகித சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுமுடி ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் எஸ்.தேவி, ஆர்.அமிர்தலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.