கோவை,
கோவை சவுரிபாளையம் முதல் பீளமேடு வரையிலான சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இம்மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுரிபாளையம் பீளமேடு சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரைபணிகள் முடிக்கப்படாததால் இந்த பகுதியை சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதற்கே சிரமப்படும் சூழல் நிலவுகிறது. மேலும் அடிக்கடி இப்பகுதியில் சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது எனவே இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அம்மனுவில் தெரிவித்தி
ருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: