அகமதாபாத்:
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ‘சகஜ்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், ‘2030-இல் சமத்துவ அளவீடுகள்’ என்ற தலைப்பில் வேறு சில அமைப்புகளுடன் இணைந்து ஆய்வொன்றை நடத்தியுள்ளது.

இதில், சாதி, மதம் மற்றும் பாலின வேறுபாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கிக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளது.“ஒருபக்கம் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் வலுப்பெறுகிறது; மறுபக்கத்தில் சாதி, வகுப்பு, பாலின வேறுபாடுகளால் வளர்ச்சி பெறாமல் பின்தங்குகிறது” என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.“குறிப்பாக, இந்தியாவிலுள்ள திருமணமான பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் தங்கள் கணவனிடம் அடி வாங்குகின்றனர்; இவ்வாறு மனைவியைக் கணவன் அடிப்பதைப் பல பெண்கள் ஏற்றுக்கொள்கின்றனர்; அந்த அளவுக்கு, இந்திய சமுதாயத்தில் ஆணாதிக்க மனப்பான்மை வேரூன்றியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

“15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்களில் 27 சதவிகிதம் பேர் குடும்ப வன்முறைக்கு உட்படுகின்றனர்; இவர்களில் பெரும்பாலானோர் 15 வயதில் இருந்தே அடி உதை வாங்குகின்றனர்; பெண்களைக் குழந்தை பெறுபவர்களாக மட்டுமே சமுதாயத்தில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்” என்று கூறியிருக்கும் சகஜ் நிறுவனம், “சிறுவர்களை ஒப்பிடும்போது, இந்தியச் சிறுமிகளும் குறைந்த அளவிலேயே கல்வியையும் சத்துணவையும் மருத்துவக் கண்காணிப்பையும் பெறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.