உதகமண்டலம்,
தமிழக அரசியலையும், கேரள அரசியலையும் கவனிப் பவர்கள், சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கிற மகத்தான ஆட்சியை கேரள இடது ஜனநாயக முன்னணி நடத்தி வருகிறது என்பதை மறுக்க மாட்டார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

நவம்பர் 12 திங்களன்று நீலகிரி மாவட்டத்தின் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான தோழர் வி.டி.ரவீந்திரன் படத்திறப்பு, கட்சி கிளை அலுவலகப் பணிகள் துவக்கம், நினைவு ஸ்தூபி அமைப்பு, மற்றும் குடும்பப் பாதுகாப்பு நிதியளிப்பு நிகழ்ச்சி அம்பலமூலா பகுதி யில் நடைபெற்றது. கேரள மாநிலம் கல்பெட்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சசீந்திரன், மாவட்டச் செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பங்கேற்று வி.டி.ரவீந்திரன் படத்தை திறந்துவைத்தும், குடும்பப் பாது காப்பு நிதியை அளித்தும் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றி னார்.அப்போது அவர் கூறிய தாவது:இந்த நிகழ்ச்சி நடைபெறும் இந்த அம்பலமூலா பகுதி யானது தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளது. இரு மாநிலங்களின் பூகோள எல்லைகள் மட்டுமல்ல. இரண்டு மாநி லங்களின் அரசியலும் சந்திக்கும் பகுதி இதுவாகும். இங்கு வாழும் மக்கள் இரு மாநிலங்களின் அரசியலையும் கவனிக்க கூடியவர்கள். கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் நடவடிக்கைகளை கவனிக்கும் போது நாம் பெருமிதமாக உணரும் அதே நேரத்தில் தமிழக நிலைமை களை கவனிக்கும் போது கவலைதான் மேலிடுகிறது. நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையினை நிலை நாட்டவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தவுமான முறையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவும், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் சார்பில் நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, கருத்தியல் தளத்திலும் மக்களிடம் உரையாடலை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனையாளர்களும் பொதுவுடமை வாதிகளும் முன்வைக்கும் சமூகநீதி மாண்புகள் குறித்து விவாதித்து வரும் சூழலில், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அவற்றை தனது செயல் திட்டமாகவே மாற்றி ஒவ்வொன்றாக அமலாக்கி வருகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் இயங்கும் ஒரு முன்னுதாரணமான அரசாக பினராயி விஜயன் அரசு விளங்குகிறது. ஆனால் தமிழ கத்தில் ஒவ்வொரு உரிமை களுக்காகவும் போராட வேண்டிய நிலையே உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல் என்பதே தமிழகத்தின் நிலைமை. பொறுப்புகளில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முதல்வர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அன்றாடம் ரெய்டு, பதுக்கிய பணத்தை பறிமுதல் செய்வது, ஆவணங்கள் கைப்பற்றப்படுதல் ஆகியவை தமிழகத்தின் நிலைமையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டக் களம் கண்டதோடு, கட்சி வளர்ச்சிக்காகவும் மிக முக்கிய பாத்திரம் வகித்த தோழர் வி.டி.ரவீந்திரனின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். முன்னதாக அம்பலமூலா பகுதியில் தோழர் வி.டி.ரவீந்திரன் நினைவகம் என்ற பெயரில் கட்சிக் கிளை அலு வலகக் கட்டுமானப் பணிகளை மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், டி.ரவீந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நினைவு ஸ்தூபியை மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.யோஹண்ணன் வரவேற்றார். எருமாடு பகுதிக்குழு செயலாளர் கே.ராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வி.டி.ரவீந்திரன் குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூபாய் இரண்டு லட்சத்திற்கான காசோலையை அவரது துணைவியார் கமலா அவர்களிடம் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, ஜே.ஆல்தொரை, எம்.ஏ.குஞ்ஞி முகமது, எல்.சங்கரலிங்கம், கே.ராஜ்குமார், ஆர்.ரமேஷ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் என மாவட்டம் முழுவதுமிருந்து திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.