சென்னை:
குழந்தைகளைப் போற்றும் மனநிலையை பெரியவர் பெற வேண்டும் என்று பாலர் அமைப்பின் மாநிலக் குழு சார்பாக என்.அமிர்தம், க.பாலபாரதி ஆகியோர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளனர். அவர்களது வாழ்த்துச் செய்தி வருமாறு:

குழந்தைகள் தினமாகிய இன்று அனைத்துக் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி நிறைந்த உற்சாகமான வாழ்த்துகளை பாலர் அமைப்பின் சார்பாக தெரிவித்துக் கொள் கிறோம்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியக் குழந்தைகள் தினமாக நவம்பர் 14 கடைப்பிடிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

விஞ்ஞானப்பூர்வமான மதச்சார்பற்ற இந்திய தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தினை வெளிப் படுத்திய நேரு அவர்களின் பிறந்த நாளில் குழந்தைகள் தினமாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.விடுமுறை தினமாக மட்டுமன்றி, குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டிய நாளாகவும் இந்நாள் மாற்றப்பட வேண்டும். அதற்கே உரித்தான நிகழ்ச்சி நிரல்களை பெற்றோர்கள், குழந்தைகள் மத்தியில் மாநில அரசுகள் நிறைவேற்ற முன்வரவேண்டும்.

பெருநகரங்கள், கிராமப் புறங்கள் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகளுக்கான பூங்காக்களை அமைத்துக் கொடுத் திட அரசுகள் முன்வரவேண்டும். வழக்கமான பூங்காக்களாக அல்லாமல், குழந்தைகளை ஈர்க்கும்  வகையில் அவைகள் அமைக்கப் பெறவேண்டும்.
குழந்தைகளின் அனைத்து உரிமைகள் பாதுகாக்கப்படுவ தற்கான சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

அரசு, தனியார் மருத்துவ மனைகளில் குழந்தைகளுக்கான மருத்துவர்கள், படுக்கை அறை வசதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். அரசு தம்கொள்கைகளில் அதனை முன்னிறுத்தவேண்டும்.போக்குவரத்துகளில் குழந்தை
களுடன் வரும் தாய், தந்தையர் களுக்கான இடம், இருக்கை உள்ளிட்ட பயணச் சலுகைளில் முன்னுரிமை இடம்பெறச் செய்யவேண்டும். அனைத்துவகை வாகனங்களிலும் 5 வயதுக்கு மேல் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். 3 வயதுக் குழந்தைக்கு அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்தாக வேண்டிய கட்டாய நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

பெண்குழந்தைகளின் பாதுகாப்பு தமிழகத்தில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது துயர
மானது. இதை அடியோடு மாற்றி யமைத்து பெண்குழந்தைப் பாது காப்பை உறுதிப்படுத்த அரசு முன்வரவேண்டும். அத்தகைய கருத்துப் பிரச்சாரத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஈடுபட வேண்டும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிகழும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கும் பெண்சிசு கரு கொலைகள் எங்கு நடந்தாலும் அதனை உறுதியோடு தடுப்பத ற்கும் அரசமைப்புகள் முன்வர வேண்டும்.குழந்தை உழைப்பு முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். இச்சமூ கத்தின் பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து குழந்தைகளை குழந்தை களாக போற்றும் மனநிலையை பெரியவர்கள் பெறவேண்டும்.

குழந்தைகள் என்பவர்கள் அழகும் மணமும் நிறைந்த இத்தேசத்தின் பல்வகைப் பூக்களைப் போன்றவர்கள்.அவர்களைக் கொண்டாடு வோம். அவர்களது பிஞ்சுக் கரம்பற்றி வாழ்த்துரைப்போம்.!!

Leave A Reply

%d bloggers like this: