புதுதில்லி:
குஜராத் கலவரம் தொடர்பாக எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

குஜராத் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டி எனுமிடத்தில் 2002 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தொடர்பான வழக்கை எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இதில், 24 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி மனைவி ஸாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 19 அன்று நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: