பென்னாகரம்,
பென்னாகரம் நகரக் குடியிருப்பு பகுதிகளில் அபாயகரமான நிலையில் மின் கம்பிகள் தொங்குவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகி உள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட பெரியார் நகர், கிருஷ்ணாபுரம், எம்.கே.நகர்லடாக்கர தெரு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் அமைக்கபட்டுள்ளன. அந்த கம்பங்களில் உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பிகளை மின்சார வாரியம் பொருத்தியுள்ளது. அவ்வாறு பொருத்தப்பட்ட மின் கம்பிகள் தரையில் இருந்து வெறும் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். குறிப்பாக மின் கம்பிகள் தொங்கும் இடங்களில் கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. அதனருகில் வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்வது உள்ளிட்டவைகள் தடைபட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மின்சார வாரியத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: