சிவகாசி:
லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலான சுற்றுச்சூழல் விதிகளை கைவிட வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

வழக்கமாக தீபாவளி முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும். ஆனால், மத்திய சுற்றுச் சூழல் துறை, வெடி பொருள் கட்டுப் பாட்டுத் துறைக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பேரியம் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், பேரியம் என்ற வேதிப் பொருளை வைத்து குழந்தைகள் வெடிக்கும்,கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு , புஸ்வானம் , சாட்டை, சரவெடிகள் போன்ற பட்டாசு தயார் செய்யப்படுகிறது. பேரியம் என்ற வேதி பொருள் இல்லாமல் 60 சதவீத பட்டாசுகளை தயார் செய்ய முடியாது என தெரிவிக் கின்றனர்.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி சிவகாசி யில் சுற்று பகுதியில் இயங்கி வரும் அனைத்து பட்டாசு ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளோம் எனவும்தெரிவித்தனர். இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகள் 1986-ல் உள்ளபடி, பட்டாசி னால் ஏற்படும் மாசானது சுற்றுச்சூழலில் 48 மணி நேரத்திற்கு மிகாமல் இருப்பதால் பட்டாசை மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி களிலிருந்து நீக்க வேண்டும். பட்டாசு சம்பந்தமான வழக்கு விசாரணை வருகின்ற டிசம்பர்
11 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத் தில் வர உள்ளது. அப்போது பட்டாசு தொழிலின் நிலை குறித்து பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை இணைத்து பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக மனுத் தாக்கல் செய்ய உள்ளோம். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங் கும் பட்டாசு தொழிலுக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.