விண்டீஸ் அணிக்கெதிரான கடைசி டி-20 ஆட்டத்தில் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் சரிந்ததால் களத்தில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று எண்ணினேன்.ரிஷப் பண்டும் கைகொடுக்க ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது.எங்களது பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானது.களத்திற்கு வந்ததுமே ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடியதால் நான் அடக்கி வாசித்தேன்.பின்னர் நானும் அவரோடு இணைந்துகொண்டு அதிரடி மூலம் வெற்றியை வசமாக்கினோம்.என்னைப் பற்றி வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.அதை நான் கண்டுகொள்ளவும் மாட்டேன்.நான் எப்போதுமே எனது ஆட்டத்தை பற்றியே நினைக்கிறேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் தவான் அளித்த பேட்டியிலிருந்து….

Leave A Reply

%d bloggers like this: