கோவை,

கோவை பன்னிமடை பகுதியில் காட்டு யானைகளை விரட்ட கொண்டு வரப்பட்ட இரு கும்கி யானைகளில் சேரன் என்ற யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மாங்கரை,ஆனைகட்டி, வரப்பாளையம் ,வீரபாண்டி உட்பட மலையடிவார கிராமங்களில் சுற்றி திரியும் சின்னதம்பி, விநாயகன் என்று செல்லப்பெயர் வைத்து பழங்குடி மக்களால் அழைக்கப்படும் காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சேரன்,ஜான் என்ற இரு கும்கி யானைகள் பன்னிமடை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த முன்று தினங்களாக இந்த இரு கும்கி யானைகள் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு வந்தது.இந்நிலையில் சேரன் என்ற கும்கி யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று ஜான் என்ற கும்கி யானை மட்டும் வனப்பகுதியில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சேரன் என்ற கும்கி யானைக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதுமலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு பொம்மன், விஜய் என்ற இரு கும்கி யானைகளும் கடந்த 4 நாட்களாக சாடிவயல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த இரு கும்கி யானைகளையும் பன்னிமடை பகுதிக்கு கொண்டு வந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.