தோழர் பினராய் விஜயனை ஒரு “நகர்ப்புற நக்சலைட்” என்று எச் ராஜா  பதிவிட்டிருக்கிறார். மக்களின் ஆதரவோடு மகத்தான சமூகநீதிக் காவலராக  வெளிப்பட்டிருக்கும் அவர்மீதான இந்த பிராமணியவாதியின் வன்மம் இப்படியாக வெளிப்படுகிறது. 1969 முதல் நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட  மார்க்சிஸ்டுகள் எண்ணற்றோர். அவர்களது இன்றைய வாரிசுகளாம் மாவோயிஸ்டுகள் மம்தாவோடு சேர்ந்து கொண்டு வங்கத்தில் கொடூரமாகத் தாக்கியது
மார்க்சிஸ்டுகளைத்தான். நக்சலைட்டுகளால் தொடர்ந்து கடுமையாக தாக்கப்படுவோரின் தலைவர் பினராய் எப்படி நக்சலைட் ஆவார்? ஆனால் அவர்களின்  கொடுந்தாக்குதலுக்கு ஆளாகாதவர்கள் யார் என்றால் பாஜகவினர்தான்! அது  ஏன், எப்படி என்று எச் ராஜா விளக்குவாரா?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: