ஹைதராபாத்,
ஆந்திராவில் நைட்டி அணிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வரக்கூடாது என ஆந்திரா கிராமம் ஒன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த டோகலாபள்ளி என்ற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டி அணிந்து வெளியே வரக்கூடாது என்று கிராமப்பஞ்சாயத்து தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். பெண்கள் பகல்பொழுதில் நைட்டி அணிந்து வெளியே வருவதால் தான் தேவையற்ற சிக்கல்கள் மற்றும் அவமானங்களும் ஏற்படுகிறது. அதனால் பெண்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்கள் நைட்டி அணிந்து கொண்டு வெளியில் வர கூடாது. இந்த விதிகளை மீறி வந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க சாதிப் பஞ்சாயத்து எனப்படும் கிராமக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் எந்த உடையை உடுத்த வேண்டும் என்பது அவர்களது விருப்பம் என்று பெண் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.