திருவனந்தபுரம்:
கேரள மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் எஸ்எப்ஐக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்துள்ளது. 46இல் 28 இடங்களை எஸ்எப்ஐ  வேட்பாளர்கள் கைப்பற்றி
னர். என்எஸ்யு, ஏஎஸ்ஏ, எம்எஸ்எப் கூட்டணிக்கு எதிராக தனித்து போட்டியிட்டு இந்த வெற்றியை எஸ்எப்ஐ பெற்றுள்ளது.

கல்வியை காவிமயமாக்கும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக மாணவர் தரப்பிலிருந்து எஸ்எப்ஐ நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களுக்கு இடையே இந்த வெற்றி கிடைத்துள்ளது.புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு நடந்த தேர்தலில் எஸ்எப்ஐ சிறப்
பான வெற்றியை பெற்றிருந்தது. கூட்டணி ஏதும் இல்லாமல் தனியாக போட்டியிட்டு மாணவர்
கவுன்சிலின் பதினொன்று இடங்களில் பத்து இடங்களை எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பெரும்பான்மையான இடங்களில் வியத்தகு வெற்றியை எஸ்எப்ஐ பெற்றுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.